அரசு பள்ளியில் சதுரங்கப்போட்டி


அரசு பள்ளியில் சதுரங்கப்போட்டி
x

அரசு பள்ளியில் சதுரங்கப்போட்டியை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

விருதுநகர்

ராஜபாளையம்.

ராஜபாளையம் தொகுதியில் சேத்தூர் சேவுக பாண்டியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வித்துறை சார்பில் ராஜபாளையம் வட்டார அளவிலான சதுரங்கப்போட்டியை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ெதாடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க இருப்பது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். மன்னர் ஆட்சி காலத்தில் மன்னர்கள் தங்களது அறிவு கூர்மையை சோதித்து விளையாட இப்போட்டியில் விளையாடினர். அதேபோல் கவனத்தை ஒருநிலைப்படுத்தவும் இப்போட்டி பயன்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் குணசீலன், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


1 More update

Next Story