கறிக்கோழி கிலோவுக்கு ரூ.12 சரிவு


கறிக்கோழி கிலோவுக்கு ரூ.12 சரிவு
x

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.12 குறைந்து உள்ளது.

நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.89-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.12 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.77 ஆக சரிவடைந்து உள்ளது.

இதேபோல் முட்டைக்கோழி கிலோ ரூ.72-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.67 ஆக குறைந்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 440 காசுகளாக நீடித்து வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


Next Story