திரைப்பட இயக்குநர் விஸ்வநாத் மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
மகா கலைஞர் விஸ்வநாத் மறைவு முகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது என முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92). வயது மூப்பால் கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார்.
ஐதராபாத் இல்லத்தில் கே.விஸ்வநாத் நேற்று நள்ளிரவில் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல திரைப்பட இயக்குநர் விஸ்வநாத் மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மகா கலைஞர் விஸ்வநாத் மறைவு முகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது என முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story