இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இமாச்சபிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
68 தொகுதிகளை கொண்ட இமாச்சபிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கின. இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியமைக்க 35 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தற்போது நிறைவடைந்துள்ளது..
மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது .. இதன் மூலம் இமாச்சலபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்க உள்ளது.
பாஜக 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது உள்ளது. இதன் மூலம் இமாச்சலபிரதேசத்தில் பாஜக தோல்வி அடைந்துள்ளது மேலும், சுயேட்சைகள் 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர் உள்ளனர்.
இந்த'நிலையில் இமாச்சபிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
காங்கிரஸ் கட்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இமாச்சலப் பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உறுதியான வெற்றியைப் பெற்றுள்ளனர்.இமாச்சல பிரதேச மக்களின் ஆசைகள் நிறைவேறட்டும் . என தெரிவித்துள்ளார்.