திருவாரூர்,நாகை மாவட்டங்களில் சுற்றுப்பயணம்: சென்னையில் இருந்து புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


திருவாரூர்,நாகை மாவட்டங்களில் சுற்றுப்பயணம்:  சென்னையில் இருந்து புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 24 Aug 2023 11:27 AM IST (Updated: 24 Aug 2023 11:30 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையில் இருந்து புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது வெளி மாவட்டங்களுக்கு அரசு முறை பயணங்களை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களுக்கு சென்று வந்தார். அங்கு நடந்த அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த நிலையில் 4 நாள் பயணமாக திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்தநிலையில், திருவாரூர், நாகை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மற்றும் மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டார். திருக்குவளையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.


Related Tags :
Next Story