அமைச்சர் அன்பில் மகேஷிடம் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!


அமைச்சர் அன்பில் மகேஷிடம் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
x

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடல் நிலை சீராக உள்ளது என்று பெங்களூரு மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

பெங்களூரு,

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூரு-ஓசூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் உடல் நிலை சீராக உள்ளது என்று பெங்களூரு மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. அமைச்சருக்கு வயிற்றின் மேல் பகுதியில் லேசான வலி காரணமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராகவே உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார். அப்போது அவரது உடல்நலம் குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.


Next Story