பெரியார் சிலைக்கு இன்று மரியாதை செலுத்துகிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


பெரியார் சிலைக்கு இன்று மரியாதை செலுத்துகிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 17 Sept 2022 7:21 AM IST (Updated: 17 Sept 2022 7:56 AM IST)
t-max-icont-min-icon

பெரியாரின் 144-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்துகிறார்.

சென்னை

பெரியார் பிறந்த நாளான செப்.17ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அவரது பிறந்த நாள் சமூகநீதி நாளாகக் கடந்த ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழியும் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் பெரியாரின் 144வது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு அண்ணா சாலையில் சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, அருகில் அலங்கரித்து வைக்கப்பட உள்ள உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

இதில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

1 More update

Next Story