தமிழக வனத்துறைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
தமிழ்நாட்டில் ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக வனத்துறைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், "பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பிச்சாவரம் அலையாத்திக் காடுகள், கரிக்கிலி பறவைகள் காப்பகம் ஆகியவை தற்போது ஈரநிலங்களுக்கான உலகின் மதிப்பு மிகுந்த 'ராம்சர்' அங்கீகாரத்தை பெற்றுள்ளன.
ஏற்கனவே இவ்வங்கீகாரத்தைப் பெற்ற கோடியக்கரையையும் சேர்த்து, தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை நான்காக ஆகியுள்ளது. இத்தகைய நிலையை எட்டியிருப்பதற்காகத் தமிழ்நாடு வனத்துறையைப் பாராட்டுகிறேன்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story