தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ராகுல்காந்திக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி


தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ராகுல்காந்திக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி
x

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "எனது அன்புச் சகோதரரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்க நாம் போராடுகிறோம். வருங்காலம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்." என்று தெரிவித்து இருந்தார்.

தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதளப்பதிவில், "தங்களது இதயப்பூர்வமான வாழ்த்துகளுக்கு நன்றி சகோதரரே! கூட்டாட்சிக் கருத்தியலை உயர்த்திப் பிடிக்க ஒன்றுசேர்ந்து உழைப்போம்! மேம்பட்ட, அனைவருக்குமான, பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவுக்காகத் தொடர்ந்து உழைப்போம்!" என்று தெரிவித்து உள்ளார்.

மேலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு சமூக வலைத்தளப்பதிவில், "மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி! பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே…. தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றி எனக் கடமையாற்றுவேன்." என்று தெரிவித்து உள்ளார்.



Next Story