கல்லூரி கட்டிடங்களை காணொளி மூலம் இன்று திறந்துவைக்கிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் முதல் அமைச்சர் வழங்குகிறார்.
சென்னை,
அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் வகுப்பறை உள்ளிட்ட கட்டிடங்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார். சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதல் அமைச்சர் திறந்துவைக்கிறார்.
வகுப்பறை, ஆய்வகம், விடுதிகள், ஆராய்ச்சி மையம், கருத்தரங்கு கூடம், பணிமனையை முதல் அமைச்சர் திறந்துவைக்கிறார். அப்போது திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ் உள்ளிட்டவற்றை முதல் அமைச்சர் வழங்குகிறார்.
மேலும், தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்குகிறார்.
Related Tags :
Next Story