மார்ச் 5, 6ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு..!


மார்ச் 5, 6ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு..!
x
தினத்தந்தி 21 Feb 2023 11:44 AM IST (Updated: 21 Feb 2023 11:47 AM IST)
t-max-icont-min-icon

மார்ச் 5, 6ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

சென்னை,

கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி 'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' திட்டம் தொடங்கப்பட்டது. இதன் முதல் நிகழ்ச்சியாக வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதையடுத்து 2-ம் கட்டமாக சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடி கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கள ஆய்வில் பங்கேற்றனர்.

இந்த நிலையில், 3-ம் கட்டமாக தென் மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதன்படி மார்ச் 5, 6-ம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

5 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கள ஆய்வுப் பணிகளை முதல்-அமைச்சர் நேரில் ஆய்வு செய்ய உள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், விவசாய பிரதிநிதிகள் உடன் முதல்-அமைச்சர் ஆலோசானை நடத்த உள்ளார். விவசாயிகள், சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு பிரதிநிதிகளை சந்தித்து கருத்துக்களை கேட்க உள்ளார்.


Related Tags :
Next Story