முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 14-ந் தேதி கோவை வருகை


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 14-ந் தேதி கோவை வருகை
x

கோவையில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 14-ந் தேதி கோவை வருகிறார்.

கோயம்புத்தூர்


கோவையில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 14-ந் தேதி கோவை வருகிறார்.

மு.க.ஸ்டாலின் வருகை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 14-ந் தேதி (வியாழக் கிழமை) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். இதைத்தொடர்ந்து கோவையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று இரவு தங்கி ஓய்வெடுக்கிறார்.

மறுநாள் 15-ந் தேதி காலை 10 மணிக்கு கோவை வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள படகுத்துறையை திறந்து வைக்கிறார். அதன் பின்னர் கோவை ஈச்சனாரி பகுதியில் தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேருரையாற்றுகிறார்.

பொள்ளாச்சியில் பொதுக்கூட்டம்

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சி செல்கிறார். அவர், அங்கு தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஈச்சனாரி பகுதியில் முதல்-அமைச்சர் பங் கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் இடத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக், சேனாதிபதி கவுண்டர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story