உதகையில் தோடர் இன மக்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடனமாடி, செல்ஃபி எடுத்து உற்சாகம்


உதகையில் தோடர் இன மக்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடனமாடி, செல்ஃபி எடுத்து உற்சாகம்
x

உதகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தோடர் இன மக்களுடன் அவர்களது பாரம்பரிய நடனத்தில் பங்கேற்று ஆடினார்.

உதகை,

124வது உதகை மலர் கண்காட்சி - உதகை 200 துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதற்காக இரண்டு நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்துக்கு சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவே விமானம் மூலம் கோயம்புத்தூர் சென்றடைந்தார். பிறகு அங்கு இன்று காலை தொழிலதிபர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்பினருடன் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

பின்னர், மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வழியாக உதகை சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுமக்கள் மத்தியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கிப் பேசினார்.

இதையடுத்து குன்னூரிலிருந்து உதகைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு தோடர் பழங்குடியின மக்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் தோடர் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து சிறிது நேரம் அவர் நடனமாடினார். பின்னர் அங்கிருந்த மக்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் வருகையையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


Next Story