மம்தா பானர்ஜி குணமடைய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குணமடைய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
திரிணமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜியின் நெற்றியில் ரத்தம் வழிகிற படங்கள், அக்கட்சியின் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அதில் நமது தலைவர் மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்காக பிரார்த்தியுங்கள் என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எதனால் இதுபோன்ற அசாம்பாவிதம் ஏற்பட்டது என்பது குறித்து விவரம் ஏதும் வெளியிடவில்லை.
இந்த நிலையில், மம்தா பானர்ஜி குணமடைய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட சாலை விபத்து குறித்து அதிர்ச்சியும் , கவலையும் அடைந்தேன்.இந்த கடினமான தருணத்தில் இருந்து அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story