ராமேஸ்வரத்தில் மீனவர்களுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடல்
ராமேஸ்வரத்தில் மீனவர்கள், அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்
ராமநாதபுரம்,
தி.மு.க. தென்மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் இன்று ராமநாதபுரத்தில் நடைபெற்றது. . தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தென்மாவட்டங்களில் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், முகவர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்த கூட்டத்தை முடித்து கொண்டு முதல்-அமைச்சர் ராமேஸ்வரம் சென்றார்
ராமேஸ்வரத்தில் மீனவர்கள், அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார் அக்காள்மடம், சேதுபதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மீனவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று முதல் அமைச்சர் கலந்துரையாடினார்.
Related Tags :
Next Story