தந்தை பெரியார் உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை


தந்தை பெரியார் உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
x

வேலூரில் தந்தை பெரியார் உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

வேலூர்

தந்தை பெரியாரின் 145-வது பிறந்தநாள் சமூக நீதி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு உள்ள தந்தை பெரியார் சிலையின் அருகே மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பெரியாரின் உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தி னார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், காந்தி மற்றும் எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார் ப.கார்த்திகேயன், மேயர் சுஜாதா மற்றும் பலர் பெரியார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் சிலை அருகே தி.மு.க. பவள விழா நினைவாக அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டை திறந்து வைத்து, கட்சி கொடி ஏற்றினார்.


Related Tags :
Next Story