கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகளை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!


கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகளை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
x

கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

சென்னை,

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் நடைபெற்ற 8 கட்ட அகழாய்வு பணிகளின் போது பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய தொல்பொருட்கள் ஏராளமாக கிடைத்தன. இவை அனைத்தும் 2600 ஆண்டுகள் பழமையானவை என ஆய்வுகளின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது

அகழாய்வு பணிகளின்போது கிடைத்த தொல்பொருட்கள் ரூ.18.42 கோடியில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை கடந்த மாதம் 5-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைத்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து கீழடியை பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகளை இன்று (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். கீழடி, அகரம், கொந்தகை என 3 இடங்களில் 9-ம் கட்ட அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

1 More update

Next Story