ஸ்பெயினில் செயல்படும் தொழில் நிறுவனங்களை இன்று சந்திக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


ஸ்பெயினில் செயல்படும் தொழில் நிறுவனங்களை இன்று சந்திக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்கவுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"ஸ்பெயின் வந்தடைந்தேன். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம். ஸ்பெயினுக்கான இந்திய தூதர் தினேஷ் கே பட்நாயக் மற்றும் தூதரக அதிகாரிகள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

இன்று மாலை ஸ்பெயின் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களைச் சந்திக்கிறேன். தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்கவுள்ளேன்." என அதில் தெரிவித்துள்ளார்.


Next Story