திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
திமுக மூத்த நிர்வாகிகளுடன் பொதுக்குழு முன்னேற்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சென்னை,
மீண்டும் திமுக தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தோ்ந்தெடுக்கப்பட உள்ளாா். இதற்காக வரும் 9-ஆம் தேதி அந்தக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதனிடையே நாளை தலைவா் தோ்தலில் போட்டியிடுவதற்கான மனுவை மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்ய உள்ளாா்.
திமுக உட்கட்சித் தோ்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 71 மாவட்டச் செயலாளா் பதவிக்கு நடந்த தோ்தலில் 64 மாவட்ட செயலாளா்கள் மீண்டும் அதே பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டனா். 7 மாவட்டச் செயலாளா்கள் மட்டும் புதியவா்கள்.
இதன் அடுத்த கட்டமாக தி.மு.க. தலைவா், பொதுச் செயலாளா், பொருளாளா் ஆகியோரை தோ்ந்தெடுக்க வரும் 9-ஆம் தேதி பொதுக் குழு கூடுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜாா்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் தி.மு.க. தலைவா், பொதுச்செயலாளா், பொருளாளா், 4 தணிக்கை குழு உறுப்பினா்களை தோ்ந்தெடுக்க உள்ளனா். இந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவா்கள் வரும் 7-ஆம் தேதி அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.
தற்போது தி.மு.க. தலைவராக உள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் மீண்டும் கட்சித் தலைவா் பதவிக்கு இரண்டாவது முறையாக போட்டியிட மனுதாக்கல் செய்ய உள்ளாா். இதேபோல் பொதுச்செயலாளா் பதவிக்கு துரைமுருகன், பொருளாளா் பதவிக்கு டி.ஆா்.பாலு போட்டியிட உள்ளனா். இந்த பதவிகளுக்கு யாரும் எதிா்த்து போட்டியிட மாட்டாா்கள் என்பதால் தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் 2-வது முறையாக தோ்ந்தெடுக்கப்படுவாா். இதற்கான அறிவிப்பு பொதுக்குழுவில் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படும். இதேபோல் மற்ற பதவிகளுக்கும் அறிவிப்பு வெளியிடப்படும்.
இந்நிலையில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் வரும் 9ம் தேதி நடைபெறும் பொதுக்குழு முன்னேற்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். பொதுக்குழு தீர்மானம், துணைப் பொதுச்செயலாளர் நியமனம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.