உத்தவ் தாக்கரேவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து


உத்தவ் தாக்கரேவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
x
தினத்தந்தி 27 July 2023 3:15 PM IST (Updated: 27 July 2023 3:15 PM IST)
t-max-icont-min-icon

மராட்டிய முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

சிவசேனா கட்சியின் தலைவரும், முன்னாள் மராட்டிய முதல் மந்திரியுமான உத்தவ் தாக்கரே, இன்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ உத்தவ் தாக்கரேவுக்கு தனது டுவிட்டரில் முதல் அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Next Story