பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருந்தது.

சென்னை,

அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைமை செயலக சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருந்தது. அதில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று மதிய உணவு இடைவேளையில் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமைச் செயலக ஊழியர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். அரசு ஊழியர், ஆசிரியர் உள்பட யாருடைய கோரிக்கையையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்றும் இனி அரசுடன் பேச்சுவார்த்தை இல்லை என்றும் கருத்து தெரிவித்தனர். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் அது பிரதிபலிக்கும் என்று அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.

1 More update

Next Story