மொரப்பூர் அருகேமோட்டார் சைக்கிள் மோதி 4 வயது குழந்தை காயம்


மொரப்பூர் அருகேமோட்டார் சைக்கிள் மோதி 4 வயது குழந்தை காயம்
x
தர்மபுரி

மொரப்பூர்

மொரப்பூர் அருகே உள்ள மருதிப்பட்டியை சேர்ந்தவர் அமுல்ராஜ். இவரது மகள் பூங்குழலி (வயது4). இந்த குழந்தை சாலையில் நடந்து சென்ற போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் குழந்தைக்கு காயங்கள் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மொரப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story