குழந்தை திருமணங்கள் அதிகரிக்க காரணம் என்ன?


குழந்தை திருமணங்கள் அதிகரிக்க காரணம் என்ன?
x

குழந்ைத திருமணங்கள் அதிகரிக்க காரணம் என்ன என்பது குறித்து அமைச்சர் கீதாஜீவன் பேட்டி அளித்தார்.

மதுரை

மதுரை,

குழந்ைத திருமணங்கள் அதிகரிக்க காரணம் என்ன என்பது குறித்து அமைச்சர் கீதாஜீவன் பேட்டி அளித்தார்.

குழந்தை திருமணம்

மதுரை விமான நிலையத்தில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், கொரோனா காலங்களில் பள்ளிகள் மூடியிருந்த நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் தான் குழந்தை திருமணங்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளன.

பள்ளிகள் திறக்கப்பட்டதற்கு பின்பு குழந்தை திருமணம் குறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் காவல்துறையில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு, சமூக நலப் பிரிவு சார்பாக கல்வி முக்கியத்துவம் மற்றும் குழந்தை திருமணம், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் இருந்தால் இலவச புகார் எண்களான 1098, 181 எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவித்தால் ரகசியங்கள் காக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

விழிப்புணர்வு

இதற்காக விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறோம். இதுகுறித்து தமிழ்நாடு பாடப் புத்தகங்களிலும் பதிவிடப்பட்டு உள்ளது. நிச்சயமாக குறையும் என்று நம்புகிறோம். ஆட்சி பொறுப்பேற்ற 15 நாட்களிலேயே எங்கள் துறைக்கு இட்ட உத்தரவு இதுதான். சட்டங்கள் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால்தான் வழக்குகள் அதிகமாக பதியப்பட்டு உள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது வேகப்படுத்தப்பட்டு தண்டனைகள் வேகமாக அளிக்கப்பட்டு வருவதால் குற்றச்செயல்கள் குறையும். அதுமட்டுமில்லாமல் இளம் வயதில் போதைக்கு அடிமையாவது குறித்தும் இந்த துறை சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிச்சயமாக இந்த நிலை மாறும் என்பது உறுதி என்றார்.


Next Story