குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம்


குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம்
x

எசனை அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் பெரம்பலூர் அருகே எசனை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து, ஒன் ஸ்டாப் சென்டர் உறுப்பினர் ஷீபா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு கவுன்சிலர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கான உரிமைகள், குழந்தை திருமணம், போக்சோ சட்டம், பெண் கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வி குறித்தும், பள்ளியில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் அவர்கள் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையத்தின் இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், பெண்கள் உதவி மேஜையின் இலவச தொலைபேசி எண் 112 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும், முதியோர் உதவி எண் 14567 குறித்தும், சைபர் கிரைம் உதவி எண் 1930 குறித்தும், போக்சோ சட்டம் 2012 குறித்தும், சட்டவிரோதமாக சாராயம் மற்றும் மது விற்பனை புகார் எண் 10581 குறித்தும், உதவி எண் 18004259565 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஒவ்வொரு மாணவிகளும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தங்களது பெற்றோர்களிடம் அச்சமின்றி தெரிவித்து, அதற்கான தீர்வினை பெற வேண்டும் என்றும் அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினா். மாணவிகள் ஒவ்வொருவருக்கும் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story