குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்


குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
x

உடன்குடி பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி பேரூராட்சியில் குழுந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் ஆலுவலர் பாபு முன்னிலை வகித்தார். குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பது, உறவினர்கள், பக்கத்து வீட்டார், பள்ளி வாகனம் ஓட்டுபவர்கள், மற்றவர்கள் ஆகியவர்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல்கள், அதனைத் தவிர்க்கும் முறை, குழந்தைகள் பாதுகாப்பு எண்கள் 1098, விழிப்புணர்வு பதாகைகள் ஆகியவை குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் செல்வி பிளாரன்ஸ் பேசினார். இதில் பேரூராட்சி, மஸ்தூர் பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story