குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
உடன்குடியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
உடன்குடி:
தமிழகஅரசின் சமூக பாதுகாப்புத்துறையின் மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகு சார்பில் உடன்குடி வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் யூனியன் அலுவலக அரங்கில் நடந்தது. யூனியன் குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமை வகித்து குழுந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசு எடுத்து வரும் சீரிய நடவடிக்கைகள், அமல்படுத்தியுள்ள சட்டங்கள் குறித்துபேசி விழிப்புணர்வு எண்கள் கொண்ட பலகையைத் திறந்து வைத்தார். குழந்தைகள் பாதுகாப்பில் சமூகநலத்துறை, மருத்துவம், பள்ளிகள், ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், எடைச்சத்துகுறைபாடு உடையவர்களை கண்டறிதல், இலவச தொலைபேசி எண் 1098, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு. மறுவாழ்வு அளித்தல் உள்ளிட்டவை குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் செல்வி பிளாரன்ஸ் பேசினார். நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஜோதிலட்சுமி, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் மலர்கொடி சுகிர்தா, ஜேம்ஸ், சமூக நலத்துறை அலுவலர்கள் ஞானேஸ்வரி, கிறிஸ்டி விஜயராணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சைல்டு லைன் உறுப்பினர் தங்கமது, கிறிஸ்தியாநகரம் நவஜீவன் விடுதி பொறுப்பாளர் ஜேசுதாசன், சிறுநாடார்குடியிருப்பு ஊராட்சி மன்றத் தலைவி கமலம் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வாவாஜிபக்கீர்முகைதீன் வரவேற்று, நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார்.