பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டி யாகம்


பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டி யாகம்
x

ஆனி மாத அமாவாசையையொட்டி பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் பொய்யாத நல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று மிளகாய் சண்டி யாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆனி மாத அமாவாசையையொட்டி பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது. யாகத்தில் பக்தர்கள் வேண்டுதலின் பேரில் சேலைகள் இடப்பட்டன. பின்னர் மஞ்சள், குங்குமம், திருநீறு, பல்வேறு வகையிலான மூலிகைகள், மா, பலா, வாழை, சப்போட்டா, மாதுளை, ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் யாகத்தில் போடப்பட்டன. தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதையடுத்து, பிரத்தியங்கிரா தேவி மற்றும் சாமுண்டீஸ்வரியை ஊஞ்சலில் வைத்து தாலாட்டினர். நிகழ்ச்சியில் பெரம்பலூர், திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story