சில்லாங்குளம்முத்துக்கருப்பன் கல்விநிறுவனங்களில்சுதந்திர தின விழா


சில்லாங்குளம்முத்துக்கருப்பன் கல்விநிறுவனங்களில்சுதந்திர தின விழா
x
தினத்தந்தி 16 Aug 2023 12:15 AM IST (Updated: 16 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சில்லாங்குளம் முத்துக்கருப்பன் கல்விநிறுவனங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு முத்துக்கருப்பன் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனரும், பள்ளி செயலாளருமான பாலமுருகன்கருப்பசாமி தலைமை தாங்கினார். முத்துக்கருப்பன் அறக்கட்டளை நிர்வாக கண்காணிப்பாளரும், சில்லாங்குளம் பஞ்சாய்த்து தலைவருமான சரோஜாகருப்பசாமி தேசிய கொடியேற்றி வைத்தார். பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் நிர்மலாபாலமுருகன், பள்ளி மேற்பார்வையாளர் ஜெயக்கொடி, கல்லூரி முதல்வர் அழகுமுத்து, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கனகலட்சுமி உட்பட ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து முத்துக்கருப்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த சுதந்திர தின விழாவிற்கு முத்துக்கருப்பன் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனரும் கல்லூரி செயலாளருமான பாலமுருகன்கருப்பசாமி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அழகுமுத்து முன்னிலை வைத்தார். இதில் முத்துக்கருப்பன் அறக்கட்டளை நிர்வாக கண்காணிப்பாளரும் சில்லாங்குளம் பஞ்சாயத்து தலைவருமான சரோஜாகருப்பசாமி தேசிய கொடியேற்றி வைத்தார். விழாவில் கல்லூரி கண்காணிப்பாளர் நிர்மலா பாலமுருகன் உட்பட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story