சீமை கருவேல மரங்கள்: தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை..!


சீமை கருவேல மரங்கள்: தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை..!
x

சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

சென்னை,

சீமைக்கருவேல மரங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், சீமைக்கருவேல மரங்களை அகற்றும்படி, அனைத்து பஞ்சாயத்துக்களுக்கும் உத்தரவிடலாம் என அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை தெரிவித்தது.

சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டதுடன், மரங்களை அகற்றும் விஷயத்தில் முன்னேற்றம் காட்ட அவகாசம் வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

அரசு கோரிக்கையை ஏற்று இந்த வழக்கு விசாரணையை கோர்ட்டு பிப்ரவரி 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.


Next Story