இலங்கையில் சீன உளவு கப்பல்: ராமேசுவரம் கடல் பகுதியில் ஹெலிகாப்டர், விமானங்கள் மூலம் தீவிர ரோந்து பணி..!


இலங்கையில் சீன உளவு கப்பல்: ராமேசுவரம் கடல் பகுதியில் ஹெலிகாப்டர், விமானங்கள் மூலம் தீவிர ரோந்து பணி..!
x

இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கையில் சீன உளவு கப்பல் அம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம்,

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி இலங்கையில் சீன உளவு கப்பல் ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கீழக்கரை கடற்கரை பகுதியில் உள்ள கலங்கரை விளக்கத்தின் மேலே பொருத்தப்பட்டுள்ள ரேடார் மூலமும் மன்னார் வளைகுடா கடல் பகுதி மற்றும் இந்திய கடல் எல்லை வரையிலும் வரும் படகுகள், ஹெலிகாப்டர்கள் குறித்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல் ராமேசுவரம் முதல் ராமநாதபுரம் மாவட்டத்தின் பாக்ஜல சந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடர்ந்து இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படைக்கு சொந்தமான 5-க்கும் மேற்பட்ட கப்பல்கள் இந்திய கடல் எல்லைப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படைக்கு சொந்தமான 2 ஹெலிகாப்டர், விமானங்களும் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருகின்றன.

1 More update

Next Story