சின்னதச்சூர் கூட்டுறவு சங்க செயலாளர், காசாளர் பணியிடை நீக்கம்
சின்னதச்சூர் கூட்டுறவு சங்க செயலாளர், காசாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
விழுப்புரம்
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி ஒன்றியம் சின்னதச்சூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் காசாளராக ரவி என்பவர் உள்ளார். இவர் கடந்த மாதம் 27-ந் தேதி திடீரென தலைமறைவானார்.
இவர், கூட்டுறவு கடன் சங்கத்தில் லட்சக்கணக்கான ரூபாய் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தனர்.
இது தொடர்பாக கூட்டுறவு கடன் சங்க இணை பதிவாளர் யசோதா தேவி விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து காசாளர் ரவி, மற்றும் கணக்குகளை சரிவர கவனிக்காத செயலாளர் சரவணன் ஆகிய 2 பேரையும் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் கூட்டுறவு கடன் சங்கத்தில், கடந்த 1-ந் தேதி முதல் கூட்டுறவு கடன் சங்கத்தில் குற்றவியல் நடவடிக்கை கண்காணிப்பு அலுவலர் விக்ரம் தலைமையிலான குழுவினர் தணிக்கை செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story