ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்


ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்
x

ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

பழவூர் அருகே ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கணேஷ் கொடியேற்றினார். தொடர்ந்து 10 நாட்கள் நடந்த திருவிழா நாட்களில் தினமும் 3 வேளைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சமய சொற்பொழிவு, இரவில் கலைநிகழ்ச்சி நடந்தது.

10-ம் திருநாள் மாலையில் வாணவேடிக்கை, செண்டைமேளம் முழங்க அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. ஊர் பெரியவர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சிறப்பு அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் கோவில் நிலையை வந்தடைந்தது.

பின்னர் சிறப்பு பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் மக்கள் செய்து இருந்தனர்.


Next Story