ரெங்கநாத பெருமாள் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்
தேவகோட்டை ரெங்கநாதபெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேவகோட்டை
தேவகோட்டை ரெங்கநாதபெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சித்திரை தேரோட்டம்
தேவகோட்டையில் பிரசித்தி பெற்ற ரெங்கநாதபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 12 நாட்கள் வரை நடைபெறும். இந்தாண்டு விழா கடந்த 10-ந் தேதி காப்புக்கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் ரெங்கநாத பெருமாள் சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், புஷ்பக விமானம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காட்சியளித்தார்.
கடந்த 15-ந் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து யானை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி காட்சியளித்தார். 18-ந் தேதி மாலையில் வெண்ணை தாழி சேவையில் காட்சியளித்தார். 10-ம் திருநாளான நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக காலையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் தேவியர்களுடன் பெருமாள் எழுந்தருளினார்.
தேவகோட்டை ரெங்கநாதபெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தொடர்ந்து 4.30 மணியளவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டம் நடைபெற்றது. தேர் சுற்றி வரும் போது பக்தர்கள் ஆங்காங்கே நின்று அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து தேர் கோவிலை சுற்றி நான்கு ரத வீதிகள் வழியாக வந்து நிலையை அடைந்தது.
இன்று(வியாழக்கிழமை) இரவு புஷ்ப பல்லக்கு மற்றும் கள்ளழகர் சேவையில் காட்சியளிக்கிறார். நாளை(வெள்ளிக்கிழமை) உத்சவ சாந்தி திருமஞ்சனத்தில் காட்சிளிக்கிறார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மேனேஜிங் டிரஸ்டி சண்முகம் செட்டியார் செய்து வருகிறார்.