திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா


திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா
x

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவள்ளூர்

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூா் வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் சித்திரை மாத பிரமோற்சவ விழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலை 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தங்கச் சப்ரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையொட்டி நாள்தோறும் காலையும், மாலையும் என இரு வேலையும் வெவ்வேறு வாகனத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான 28-ம் தேதி காலை கருட சேவையும். 7-ம் நாளான மே 2-ம் தேதி திருத்தேர் நடைபெறும். தொடர்ந்து பிரம்மோற்சவத்தின் 9-வது நாளான மே 4-ம் தேதி தீர்த்தவாரி நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story