சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா ஆலய திருவிழா


சொக்கன்குடியிருப்பு  அதிசய மணல் மாதா ஆலய திருவிழா
x
தினத்தந்தி 26 Sept 2022 12:15 AM IST (Updated: 26 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா ஆலய திருவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் நெல்சன்பால்ராஜ் தலைமை வகித்து திருவிழா கொடியேற்றினார். இதில் செட்டிவிளை பங்குதந்தை ததேயுராஜா, திருத்தல அதிபர் ஜாண்சன்ராஜ் உள்ளிட்ட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் இரவு அதிசய அன்னையின் தேர்ப்பவனி நடந்தது. நேற்று தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையில் திருப்பலி நடந்தது. இரவு 7மணிக்கு ஜெபமாலை, தொடர்ந்து அன்னையின் தேர்ப்பவனி நடந்தது.

இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தர்கள் கலந்து கொண்டு மெழுகு வர்த்தி, உப்பு மிளகு வைத்து அன்னையை வழிப்பட்டனர். இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு செம்மணலில் தோண்டி எடுக்கப்பட்ட புதுமை கோவிலில் திருத்தல உபகாரியங்களுக்காக நன்றி திருப்பலி மற்றும் கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது.


Next Story