சோலையாறு அணையில் 2 மாதங்களுக்கு பிறகு மின்சார உற்பத்தி தொடக்கம்


சோலையாறு அணையில் 2 மாதங்களுக்கு பிறகு மின்சார உற்பத்தி தொடக்கம்
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சோலையாறு அணையில் 2 மாதங்களுக்கு பிறகு மின்சார உற்பத்தி தொடங்கியது.

கோயம்புத்தூர்

வால்பாறை

சோலையாறு அணையில் 2 மாதங்களுக்கு பிறகு மின்சார உற்பத்தி தொடங்கியது.

சோலையாறு அணை

வால்பாறை பகுதியில் பருவமழை தொடங்கிய நாளிலிருந்து வால்பாறை பகுதியிலும் தமிழக -கேரள எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் கேரளாவில் உள்ள சோலையாறு அணைக்கும் வால்பாறையில் உள்ள சோலையாறு அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து கொண்டேயிருந்தது. இந்த நிலையில் வால்பாறை சோலையாறு அணை கடந்த ஜூலை மாதம் 10-ந் தேதி முழு கொள்ளளவான 160 அடியை தாண்டியது. 11-ந் தேதி சோலையாறு அணையிலிருந்து உபரி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து சோலையாறு அணையின் 2-வது மின் நிலையம் ஆகஸ்டு மாதம் 19-ந் தேதியிலிருந்து இயக்கப்பட்டு 16 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்ட பின் தண்ணீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டு வந்தது.

மின் உற்பத்தி தொடக்கம்

இந்த நிலையில் கேரள வனப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கேரள சோலையாறு அணையும் நிரம்பி வழிந்தது. இதனால் சோலையாறு மின் நிலையம் இரண்டு இயக்கப்படுவது அவ்வப்போது நிறுத்தப்பட்டு வந்தது. வால்பாறை சோலையாறு அணையிலிருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறக்கப்படுவது கடந்த 56 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது வால்பாறை மற்றும் கேரள பகுதியில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருவதாலும் ஒப்பந்தப்படி கேரளாவிற்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டிய நிலையிருப்பதாலும் நேற்று முன்தினம் முதல் மீண்டும் சோலையாறு மின் நிலையம் 2 இயக்கப்பட்டு 16 மெகாவாட் மின் உற்பத்திக்கு பின் 410 கன அடித் தண்ணீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்ததால் சோலையாறு அணையிலிருந்து பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறப்பது கடந்த மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ளதால் சோலையாறு மின் நிலையம் ஒன்று இயக்கப்படுவது நிறுத்தப்பட்டு உள்ளது. அதனால் சோலையாறு அணை தனது முழு கொள்ளளவில் கடந்த 95 நாட்களாக இருந்து வருகிறது.


Next Story