கிறிஸ்தவர்கள் பாதயாத்திரை


கிறிஸ்தவர்கள் பாதயாத்திரை
x

கிறிஸ்தவர்கள் பாதயாத்திரை சென்றனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தென்னிந்திய திருச்சபைகள் சார்பில் சாட்சியாபுரத்தில் தவசஉற்சவப் பண்டிகை 4 நாட்கள் நடைபெறும். அதேபோல இந்த ஆண்டும் நடைபெற்று வருகிறது. இதில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருச்சபையினர் கலந்து கொண்டனர்.

இதையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தின் குருசேகர தலைவர் மற்றும் சபைகுரு பால்தினகரன் தலைமையில் 75-க்கும் மேற்பட்ட சபை மக்கள் பாதயாத்திரையாக சாட்சியாபுரத்திற்கு சென்றனர். சபைகுரு பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். பாதயாத்திரை சாட்சியாபுரத்தைச் சென்றடைந்ததும் அங்கு வட்டகை மன்ற தலைவர்கள் டேவிட் ஜெபராஜ், ஜான்கமலேசன் ஆகியோர் திருச்சபை மக்களை வரவேற்றனர். சிலுவைக் கொடியை மதுரை-முகவை திருமண்டல பேராயரம்மா மற்றும் பெண்கள் ஐக்கிய சங்க தலைவி மேரி ஜெயசிங் தலைமையில், பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் ஏற்றி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை வட்டகை மன்ற தலைவர்கள் செய்திருந்தனர்.


Next Story