கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டிதேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைதிரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு


கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டிதேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைதிரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 25 Dec 2022 6:45 PM GMT (Updated: 25 Dec 2022 6:45 PM GMT)
தர்மபுரி

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். பிரார்த்தனைகள் முடிந்த பின்னர் ஒருவருக்கொருவர் கேக் மற்றும் இனிப்பு வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

தர்மபுரி மறை மாவட்டம் சார்பில் தர்மபுரி பாரதிபுரத்தில் அன்னசாகரம் செல்லும் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் தூய இருதய ஆண்டவர் பேராலய வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

சிறப்பு திருப்பலி

மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பங்குத்தந்தை அருள்ராஜ், உதவி பங்குத்தந்தை லிபின், பங்குத்தந்தைகள் ஏசுராஜ், ஜெயின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். பிரார்த்தனை முடிந்த பிறகு ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

சி.எஸ்.ஐ. சியோன் ஆலயம்

தர்மபுரி சி.எஸ்.ஐ. சியோன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பாதிரியார் பிரான்சிஸ் பெர்னாட்ஷா தலைமையில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் வேப்பமரத்து கொட்டாயில் உள்ள ஏ.ஜி. தேவாலயத்தில் பாதிரியார் சுந்தர் சிங் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று கோவிலூரில் உள்ள தேவாலயத்தில் பங்குத்தந்தை ஏசுதாஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. செல்லியப்பட்டியில் பங்குத்தந்தை மதலைமுத்து தலைமையிலும், கடகத்தூரில் பங்குத்தந்தை சவுரியப்பன் தலைமையிலும், பாலக்கோட்டில் பங்குத்தந்தை கென்னடி தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

பொம்மிடி

இதேபோல் பூலாப்பட்டியில் பங்குத்தந்தை புஷ்பராஜ் தலைமையிலும், பி.பள்ளிப்பட்டியில் பங்குத்தந்தை தேவசகாயம் தலைமையிலும், பொம்மிடியில் பங்குத்தந்தை ஆரோக்கிய கென்னடி தலைமையிலும், தென்கரைக்கோட்டையில் பங்குத்தந்தை வினோத் தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு வெளியே ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினர்.


Next Story