கிறிஸ்துமஸ் பண்டிகை: சென்னையில் நேற்று இரவு மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 140 பேர் மீது வழக்கு...!
சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற சிறப்பு வாகன தணிக்கையில் 281 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் நேற்று இரவு சிறப்பு வாகன தணிக்கையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். அப்போது மதுபோதை மற்றும் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அதன்படி மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக மட்டும் 140 பேர் மீதும், உரிமமின்றி வாகனம் ஓட்டியதாக 33 பேர் மீதும்
வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு நடைபெற்ற சிறப்பு வாகன தணிக்கையில் மட்டும் 281 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story