கிறிஸ்துமஸ் பண்டிகை: மைசூரு - கொச்சுவேலி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மைசூரு - கொச்சுவேலி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
சென்னை,
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் சேலம், ஈரோடு, திருப்பூர் கோவை வழியாக மைசூரு - கொச்சுவேலி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
அதன்படி மைசூரு - கொச்சுவேலி சிறப்பு ரெயில் (வண்டி எண் 06211) இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 25-ந் தேதி ஆகிய நாட்களில் மைசூருவில் இருந்து இரவு 11.30 புறப்பட்டு மாண்டியா, கெங்கேரி, பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மெண்ட், ஓசூர், தர்மபுரி வழியாக மறுநாள் காலை 7.53 மணிக்கு சேலம் வந்தடையும், பின்னர் இங்கிருந்து 7.55 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் ,கோவை, பாலக்காடு, திருச்சூர், அலுவா ,எர்ணாகுளம், கோட்டயம், திருவல்லா, செங்கனூர், கொல்லம் வழியாக இரவு 7.20 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.
இதேபோல் மறு மார்க்கத்தில் கொச்சுவேலி - மைசூர் சிறப்பு ெரயில் (06212) நாளை (சனிக்கிழமை) மற்றும் வருகிற 26-ந் தேதி ஆகிய நாட்களில் கொச்சுவேலியில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு கோவை ,திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 9.25 மணிக்கு சேலம் வந்தடையும், பின்னர் இங்கிருந்து புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு மைசூரு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.