ஆலயங்களில் கிறிஸ்துமஸ் விழா


ஆலயங்களில் கிறிஸ்துமஸ் விழா
x

ஆலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி

இயேசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25-ந்தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் காலை, மாலையில் சிறப்பு பிரார்த்தனைகள், நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. பாளையங்கோட்டை கதிட்ரல் பேராலயம் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

அதே போல் பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு இருந்தது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்த்து சென்றனர்.


Next Story