ஆங்கில புத்தாண்டையொட்டிதேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
நாமக்கல்
ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்திலும் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள தமிழ் பாப்திஸ்து திருச்சபையில் போதகர் ஸ்டேன்லி ஜோன்ஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதேபோல் கிறிஸ்து அரசர் தேவாலயம், கணேசபுரம் சி.எஸ்.ஐ. தேவாலயம், ஏ.ஜி.சபை என நகரில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
Related Tags :
Next Story