கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டிதேவாலயங்களில் சிறப்பு திருப்பலிதிரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டிதேவாலயங்களில் சிறப்பு திருப்பலிதிரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 9 April 2023 7:00 PM GMT (Updated: 9 April 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.

ஈஸ்டர் பண்டிகை

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரியில் உள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் சார்பில் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பங்குத்தந்தை இசையாஸ் திருப்பலி பிரார்த்தனைகளை நிறைவேற்றி வைத்தார்.

சிறப்பு பிரார்த்தனை

முன்னதாக அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் இருந்து 3-வது நாள் இயேசு உயிர்தெழும் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த சிறப்பு திருப்பலியின் போது கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது. இதை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.


Next Story