தர்மபுரி தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில்சிறப்பு திருப்பலி


தர்மபுரி தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில்சிறப்பு திருப்பலி
x
தினத்தந்தி 8 May 2023 7:00 PM GMT (Updated: 8 May 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி பாரதிபுரத்தில் உள்ள தூய இருதய ஆண்டவர் புதிய பேராலயத்தில் புது நன்மை உறுதி பூசுதல் சிறப்பு திருப்பலி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த சிறப்பு திருப்பலியில் சிறுவர், சிறுமிகள் வெள்ளை நிற உடை அணிந்து கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பங்கேற்றனர். தொடர்ந்து 32 சிறுவர், சிறுமிகளுக்கு புது நன்மை உறுதி பூசுதல் நடைபெற்றது. இதில் ஆயர் ஒவ்வொரு குழந்தைக்கும் நெற்றியில் பிளாஸ்மா என்னும் புனித தைலத்தில் சிலுவையிட்டார். இதில் முதன்மை பங்குதந்தை அருள்ராஜ் மற்றும் பங்கு தந்தைகள், பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story