செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலய கொடியேற்று விழா


செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலய கொடியேற்று விழா
x

செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலய கொடியேற்று விழா நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பொறையாறு ராஜம்பாள் தெருவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 22-ம் ஆண்டு கொடியேற்று விழா மற்றும் தேர்பவனி நடைபெற்றது. முன்னதாக ஆலயத்திலிருந்து கொடி ஊர்வலம் மற்றும் மிக்கேல் ஆண்டவர், தேவமாதா, குழந்தை ஏசு, செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆகிய சொரூபங்கள் தனித்தனியாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைக்கப்பட்டு பேண்டு வாத்தியம், கேரள செண்டை மேளம் முழங்க நாட்டிய குதிரைகளுடன் புறப்பட்டது. அப்போது விரதம் இருந்து சிகப்பு ஆடை அணிந்த ஆண் மற்றும் பெண்கள் பழவகைகள், இனிப்பு வகைகள், வளையல்கள், தென்னங்கன்று, ஆடைகள் ஆகிய சீர்வரிைச பொருட்களை எடுத்து பக்தி பாடல்களை பாடியவாறு ஊர்வலமாக சென்றனர். ராஜம்பாள் தெரு, மொய்தீன் மரைக்காயர் தெரு, வேப்பமரத்தெரு, நாடார் காளியம்மன் கோவில் தெரு, பார்வதி அம்மன் கோவில் தெரு வழியாக சென்ற ஊர்வலம் மீண்டும் ஆலயத்தை அடைந்தது. பின்னர், ஆலய நிர்வாகி மைக்கேல்ராஜ் முன்னிலையில் கொடி ஏற்றப்பட்டது. இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

1 More update

Next Story