புனித அந்தோணியார் ஆலயத்தில் திவ்ய நற்கருணை பெருவிழா


புனித அந்தோணியார் ஆலயத்தில் திவ்ய நற்கருணை பெருவிழா
x

புனித அந்தோணியார் ஆலயத்தில் திவ்ய நற்கருணை பெருவிழா நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை கூறைநாடு புனித அந்தோணியார் பங்கு ஆலயத்தில் திவ்ய நற்கருணை பெருவிழா சிறப்பு திருப்பலி மற்றும் நற்கருணை பவனி நடந்தது. முன்னதாக, புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளி வளாகத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. புதுக்கோட்டை செட்டியாபட்டி பங்கு தந்தை சவரிநாதன் அடிகளார், எருக்கூர் பங்கு தந்தை ஜோசப் செல்வராஜ் அடிகளார், குத்தாலம் பங்கு தந்தை ஜெர்லின் கார்ட்டர் அடிகளார் ஆகியோர் திருப்பலியை நிறைவேற்றினர். தொடர்ந்து திவ்ய நற்கருணை பவனி நடந்தது. இருதய சபை அருட்சகோதரர் பங்கிராஸ் பவனியை வழிநடத்தினார். பின்னர் ஆலய வளாகத்தில் திவ்ய நற்கருணை ஆராதனை நடந்தது. மாந்தை உதவி பங்குதந்தை அலெக்சாண்டர் அடிகளார் மறையுரையாற்றினார். புனித அந்தோணியார் ஆலய பங்கு தந்தை ஜான் பிரிட்டோ அடிகளார் உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனை வழிபாடு மேற்கொண்டார். மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் தார்சிஸ் அடிகளார் திவ்ய நற்கருணை ஆசிர் வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜான் பிரிட்டோ அடிகளார் தலைமையில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

1 More update

Next Story