புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா தேர்பவனி


புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா தேர்பவனி
x
தினத்தந்தி 3 Dec 2022 6:45 PM GMT (Updated: 3 Dec 2022 6:47 PM GMT)

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா தேர்பவனி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா தேர்பவனி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.

சவேரியார் ஆலயம்

மயிலாடுதுறையில் பிரசித்திப்பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் உள்ளது. இங்கு திருவிழா கடந்த மாதம் (நவம்பர்) 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான சிறப்பு திருப்பலி மற்றும் திருத்தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் பங்குத்தந்தை தார்சிஸ் ராஜ் தலைமையில் நடந்த விழாவில் உதவி பங்குத்தந்தை மைக்கில் டைசன் தொடக்க உரையாற்றி வரவேற்றார்.

திருப்பலி

சீர்காழி பங்குத்தந்தை அந்தோணி டேனியேல, கூறைநாடு பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ, ஆத்துக்குடி பங்குத்தந்தை மரியதாஸ், எருக்கூர் பங்குத்தந்தை ஜோசப் செல்வராஜ், குத்தாலம் பங்குத்தந்தை ஜெர்லின் கார்ட்டர், மாந்தை பங்குத்தந்தை ஜோசப் ஜெரால்டு, பில்லாவடந்தை பங்குத்தந்தை சாலமோன், மணல்மேடு பங்குத்தந்தை ஆனந்தராஜ், காழியப்பநல்லூர் தொன்போஸ்கோ தொழில்நுட்பக் கல்லூரி அதிபர் டேனியேல், நீலவேலி தந்தை செபாஸ்டின், ஆவுடையார்கோவில் உதவிப் பங்குத்தந்தை பிராங்கோ எடின் ஆகியோர் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர்.

ஆவுடையார்கோவில் மறைவட்ட அதிபர் பங்குத்தந்தை ஆரோ.அருளரசு திருவிழா மறையுரையாற்றினார். தொடர்ந்து புனித சவேரியாரின் திருஉருவம் தாங்கிய தேர்பவனி நடைபெற்றது. அப்போது வான வேடிக்கை, இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆலய வளாகத்தில் தொடங்கிய தேர்பவனி அரசு ஆஸ்பத்திரி சாலை, காந்திஜி சாலை உள்ளிட்ட வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

திருப்பலி மற்றும் தேர்பவனி நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்றனர்.


Next Story