மின்வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


மின்வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:45 PM GMT)

வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதமடைந்ததால் மின்வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர்

அண்ணாமலை நகர்,

சிதம்பரம் அருகே உள்ள திருவாசலடி கிராமத்தில் நேற்று காலை மின்கம்பி மீது தென்னை மட்டை ஒன்று விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் தடை ஏற்பட்டது. தகவல் அறிந்த மின் ஊழியர்கள், நேரில் சென்று மின் கம்பத்தில் ஏறி சாிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் கூடுதல் மின் அழுத்தம் ஏற்பட்டு, அங்குள்ள வீடுகளில் இயங்கி கொண்டிருந்த டிவி, மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ், மின் விசிறி ஆகியன சேதமடைந்தது. இதில் சுமார் 40 வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் சேதமானது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மின்வாரியத்தை கண்டித்து திருவாசலடி மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி அறிந்த அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்பனா தலைமையிலான போலீசார் மற்றும் மின் மேற்பார்வையாளர் மணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது அந்த கிராமத்தில் மீண்டும் உயர் மின் அழுத்தம் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதனால் சாலை மறியல் போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story