ரிஷிவந்தியத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


ரிஷிவந்தியத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Jun 2023 12:15 AM IST (Updated: 19 Jun 2023 6:53 AM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியத்தில் தியாகதுருகம் - திருக்கோவிலூர் சாலையில் உள்ள குடியிருப்புகள் மற்றும் அந்த பகுதியில் உள்ள விவசாய பம்பு செட்டுகளுக்கும் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது.

இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். விவசாயிகள், தங்களது பயிருக்கு முறையாக தண்ணீர் பாய்ச்ச முடியாமல் போனது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யக்கோரி, ரிஷிவந்தியம் சனிமூலை பஸ்நிறுத்தம் அருகே நேற்று காலை 8.30 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவலறிந்த ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அதில் மின்தடை குறித்து மின்வாரியத்தில் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார், உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story