குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு-கலெக்டரிடம் மனு


குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு-கலெக்டரிடம் மனு
x

குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வளவனூர் கிருஷ்ணா நகர் மக்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் வளவனூர் பேரூராட்சிக்குட்பட்ட கிருஷ்ணா நகரில் போடப்பட்ட மனைப்பிரிவில் இடம் வாங்கி குடியிருந்து வருகிறோம். நாங்கள் வசித்து வரும் மனைப்பிரிவை போட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளர், ஒரு மனையில் தனியார் நிறுவன செல்போன் கோபுரம் அமைக்க அனுமதியளித்து ஒப்பந்தம் போட்டுள்ளார். இதனால் அங்கு செல்போன் கோபுரத்திற்கான கட்டமைப்பு பணிகள் எந்தவித தடையின்மை சான்று பெறாமலும், உள்ளாட்சி நிர்வாகத்தின் அனுமதி பெறாமலும் நடைபெற்று வருகிறது. குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்போன் கோபுரம் அமைத்தால் அதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுகள் மூலம் பொதுமக்களுக்கு பலவித நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இங்கு செல்போன் கோபுரம் அமைய உள்ள இடத்தின் அருகில் ஒரு நர்சரி பள்ளியும் இயங்கி வருகிறது. ஆகவே மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு, எங்கள் குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க தடைவிதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவைப்பெற்ற மாவட்ட கலெக்டர் பழனி, இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


Related Tags :
Next Story